Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Friday, May 13, 2011

ADMK to victory

மக்களே! மக்களுக்கு மக்களே!
ADMK வெற்றி வாகை சூடி இப்போ தமிழ்நாட்டுல ஆட்சி செய்ய போறாங்க. இனியாவது எல்லா வகையான அராஜகமும் குறையும்னு எதிர்பார்ப்போம் (நிக்கனும்னு ஆசை படறது எல்லாம் too too much!) 

இனி சிலரோட reactions:

அப்பாடா! ஆட்சிய புடிச்சாச்சு! அடுத்து சுவிஸ் பாங்க்ல புது அக்கௌன்ட் போடணும்! அந்த கருணாநிதிய... மகனே! இருடி... வக்கறேன் ஆப்பு!

அச்சோ! இப்படியே கடைசி வரைக்கும் இருக்கலாம்னு நினைச்சேனே! எல்லாம் போச்சே!! retirement பிளான் கூட இல்லையே!


அப்பா! நான் டெல்லி போக மாட்டேன்!! எல்லாரும் கனிமொழின்னு கூப்பிடாம களிமொழினு கூப்பிட்டு டார்ச்சர் பண்ணுவாங்க! 


அய்யா! இந்த அய்யாவ நம்பாம அம்மாவை நம்பி இருக்கலாமோ! கொஞ்சம் ஓவரா தான் போய்டுச்சு பேச்சு! இனி நான் என்ன பண்ணுவேன் ஏது பண்ணுவேன்! கேப்டன் வேற வந்து நொங்கு எடுப்பாரே!! ஆத்தா!! 

இதுல பய புள்ளைக option வேற தரானுங்க! velanguvaanungala? 
வேண்டாம்! வலிக்குது அழுதுடுவேன்!


யப்பா! எவ்வளவு டார்ச்சர் தந்தாங்க! இப்பவும் நம்ம ஒரு வோட்டு போட்டா, லட்சம் வோட்டு போட்ட மாதிரி! யாருகிட்ட! நம்ம கிட்டயேவா!! கிங் மேகர்னா சும்மாவா?

அய்யா போய் அம்மா வந்தாச்சு! இவங்களாவது ஏதாவது நமக்கு நல்லது பண்ணுவாங்களான்னு பாப்போம்! 

PS: all the above is sondha karpanai, but the images suttufied from all over the web. Indha images thandhavangalukku nandri hai!

Tuesday, March 29, 2011

கிரிக்கெட் கொண்டாட்டம்!

அன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே, பொது மக்களே (எல்லாம் தேர்தல் effectட்டு தான்!)
                     நடக்கவிருக்கும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, இந்த வாரம் வரவிருக்கும் பதிவுகள் வர மாட்டா. அடுத்த வாரம்...... அது அப்போ பார்த்துப்போம்!
இப்படிக்கு,
ஆல்பைன்

PS: எல்லாரும் double duty போட்டு, இந்தியா ஜெயிக்க அவங்க அவங்க இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கோங்க! வர்ர்ர்ட்ட்டா!!!!

Tuesday, March 08, 2011

Leave letter to Dmgr

[Dedicated to Porkodi - who has been working day in and day out to make a biiiiiiigggggg ஆணி குவியல்]

Dmgr - அட அதுதாங்க நம்ம மேனேஜர் - அவர் அப்போப்போ damageum பண்றதால, செல்ல பேர், காரண பேர் எல்லாம் சேர்த்து வந்த பேர் dmgr.

Idea copied from some photo posted by someone on facebook - but slight change!
அவங்க டீச்சர்க்கு எழுதி இருந்தாங்க, நாம நம்ம Dmgrக்கு எழுதலாம். அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு!!

From,
நான் தான்,
உன் team தான்,
இதே company தான்யா,
அண்ணே! இதே ஊரு தாணே!

To,
உனக்கு தான்,
இந்த team தான்,
அதே மன்னார் அண்ட் கோ தான்
அட, அதே ஊரு தான்! சொல்றோம்ல!

Dear Dmgr,
                   ஆணி பிடுங்கி பிடுங்கி எனக்கு ஒரே tired ஆயிடுச்சு... So, இனி எவ்வளவு ஆணி இருந்தாலும், அதெல்லாத்தையும் நீயே பிளான் போட்டு புடுங்கிகோ! நான் இன்னிக்கு லீவுங்கோவ்வ்வ்வ்!!!

PS: எதையும் பிளான் பண்ணி தான் பண்ணனும். அண்ணனோட பேர damage பண்ணிடகூடாது. அண்டர்ஸ்டார்ண்டு??

ரெம்ப தேங்க்ஸ்,
நான்தானுங்க

Tuesday, February 22, 2011

சுமதி வந்திருக்கிறாள் - ரகசியமாய் ரகசியமாய்

சுமதி வந்திருக்கிறாள்....

என் மனைவி சுமதி. ஆசைமிகு மனைவி சுமதி. எங்கள் தலை தீபாவளிக்காக அவள் பிறந்தகம் வந்திருக்கிறோம். அவளது புத்தகங்களை பார்க்கும்போது எனக்கு எங்கள் இரண்டாம் சந்திப்பு ஞாபகம் வருகிறது. அதில் சுமதி, தன் கனவான அமெரிக்க படிப்பு பற்றியும், அதை தான் செய்ய முடியாத நிலை பற்றியும் கூறினாள். அதற்கான காரணங்கள் பற்றியும் கூறினாள். அப்பொழுது எனக்கு அவளை மிகவும் பிடித்துப்போனது. எப்படியாவது அவளை அமெரிக்காவில் படிக்க வைப்பது என்று முடிவு செய்தேன்.

என் பெயர் சுந்தர். நான் ஒரு MNCஇல் வேலை பார்க்கிறேன். இன்னும் சில மாதங்களில் என் வேலைக்காக அமெரிக்கா செல்ல போகிறோம். ஆம், சுமதியும் கூட தான்! அவளுக்கு அங்கு படிக்க ஏற்பாடும் செய்து விட்டோம். இந்த தீபாவளி திருநாளன்று இவர்கள் தெருவே கூடி கொண்டாடுவது மிகவும் ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. இன்னும் சில வருடங்களுக்கு இதையெல்லாம் மிஸ் செய்ய போகிறோம்! சோ, இப்பொழுதே இதையெல்லாம் என்ஜாய் செய்து கொள்கிறோம். ஆனால், ஒரு ரகசியம் சொல்கிறேன். நாங்கள் அங்கும் ஒரு குட்டி தீபாவளி இதே தெரு மக்களுடன் கொண்டாட போகிறோம்! எப்படி தெரியுமா? சுரேஷுடன் தான்! சுரேஷ் சுமதியின் அருமை நண்பன். அவனுக்காக தன் படிப்பை விட்ட சுமதி, அவன் படிக்க போகும் அதே கல்லூரியில் படிக்க போகிறாள். இருவரும் ஒரே கல்லூரி என்ற விஷயம் என்னை தவிர யாருக்கும் தெரியாது, இந்த நிமிடம் வரை. ஆம்! சுமதிக்கு கூட! இன்று இரவு எங்கள் தலை தீபாவளி விருந்துக்கு எல்லாரையும் அத்தை அழைத்திருக்கிறார்கள். அப்பொழுதுதான் சுமதி, தன் பெற்றோரிடம் நாங்கள் அமெரிக்கா செல்ல போவதையும் தான் படிக்க போவதையும் சொல்ல போகிறாள். அப்போது, சாரதா auntyயும் சுரேஷும் இருக்க ஏற்பாடு செய்து விட்டேன். அவர்கள் சுமதியின் படிப்பை பற்றி கவலைபடுவதாக தெரிகிறது. அதை பார்த்து அத்தையும் கவலை படுகிறார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! எல்லார் கவலையும் தீரும்; தீபாவளியும் இனிய தீபாவளியாக நிறைவு பெறும். சுரேஷும் சுமதியும் மறுபடியும் ஒரே இடத்தில், ஒன்றாக படிக்க போவதை அறியும்போது எல்லாரும் எவ்வளவு சந்தோஷபடுவார்கள் என்று நினைக்கும்போதே எனக்கு இன்னும் சந்தோஷமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது. இதுவே நான் என் மனைவிக்கு தரும் தலை தீபாவளி பரிசு :) இன்று இரவு விருந்து அமர்களமான, யாரும் மறக்க முடியாத விருந்தாக அமைய போகிறது! சோ, அது வரை, இந்த ரகசியத்தை நீங்கள் யாரிடமும் சொல்லிவிட மாட்டீர்கள் தானே?

Thursday, February 17, 2011

சுமதி வந்திருக்கிறாள் - என்னவென்று சொல்வதம்மா..

சுமதி வந்திருக்கிறாள்...

என் தோழியின் பெண் சுமதி. எனக்கும் பெண் போல தான். எனக்கு இப்படி ஒரு மகள்/மருமகள் கிடைக்க வேண்டும் என எல்லோரும் நினைக்கும் ஒரு பெண். என் மகனின் உயிர் தோழி... சில காலம் முன்பு வரை. இந்த தீபாவளியை என்னுடன் கொண்டாடாமல், என் மகன் எங்கோ சுற்றி சுற்றி திரிய காரணமான பெண். அவன் எத்தனைக்கு விலகி போகின்றானோ, அத்தனைக்கு அவனை பற்றி எதுவும் கேட்காத பெண்.

என் பெயர் சாரதா. வீட்டையும், வேலையையும் பார்க்கும் பல்லாயிரகணக்கான தாய்மார்களுள் ஒருத்தி. சுரேஷ் அப்பா இறந்த பிறகு, வீடு, வேலை, இவற்றோடு சுரேஷையும் வளர்க்க நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. இதற்கெல்லாம் உதவியாய் இருந்தது சுமதியின் பெற்றோரும் மற்ற தெரு மக்களும் தான். இங்கு எல்லோரும் எல்லாருக்கும் உதவி கொள்வோம். எனக்கு வாழ்வில் ஒரே ஆசை, சுரேஷ் நன்றாக இருக்க வேண்டும் என்று. அதற்கு அவன் அமெரிக்கா செல்ல வேண்டும், நிறைய கற்க வேண்டும், பெரிய பதவி வகிக்க வேண்டும். இதற்கு ஆயிரம் பேர் உதவி இருந்தாலும், மிகவும் உதவியது சுமதி தான். சுரேஷ் படிக்க உதவினாள்; சுரேஷுக்கு அமெரிக்க கனவை தன் கனவென்று சொல்லி அவனையும் கனவு காண செய்தாள். இப்பொழுது, அவன் நல்ல வேலையில் இருக்கிறான். அமெரிக்கா செல்லவும் போகிறான். இதெல்லாம், சுமதி சுரேஷுக்கு செய்த உதவிகள். ஆனால், இப்பொழுது இருவரும் பேசிகொள்வதே இல்லை. ஒருவரை பற்றி ஒருவர் கேட்பதும் இல்லை. அதற்கு காரணம், சுமதி சுரேஷுக்கு செய்த பெரிய, யாருக்கும் தெரியாத, எனக்கு மட்டும் புரிந்த உதவி. சுமதியும் சுரேஷும் அமெரிக்கா செல்ல போன வருடம் தயார் ஆனார்கள். ஆனால், சுரேஷ் எனக்காக அமெரிக்கா செல்வதை நிறுத்தி விட்டான்.உன்ன யாருமா பார்த்துபாங்கன்னு பையன் கேட்கறது எத்தனை பேருக்கு கிட்டும் சொர்க்கம்? அது எனக்கு கிடைத்தது. நான் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. சுமதி என்னையும் சுரேஷையும் புரிந்து கொண்டு, சுரேஷிடம் தனக்கு கல்யாணம் நிச்சயமானதால் தான் படிக்க முடியாதென்றும், தன் கனவான அமெரிக்க படிப்பை தனக்காக அவன் நடத்த வேண்டும் என்றும், அதுவே அவளுக்கு அவன் தரும் கல்யாண பரிசென்றும், அவன் வரும் வரை என்னை அவள் பார்த்து கொள்வதாகவும் சொல்லிவிட்டாள். சுரேஷ் குதித்தான், கெஞ்சினான், அவளை படிக்க போகுமாறு. ஆனால், சுமதி ஒத்துக்கொள்ளவில்லை. அதில் இருவரும் சண்டை போட்டு பிரிந்தனர். இப்பொழுது பேசிக்கொள்வதே இல்லை. என்னிடம், அவள் பெற்றோர் கல்யாணத்திற்கு அவளை force செய்ததாக சுரேஷிடம் சொல்ல சொல்லிவிட்டாள். அப்பொழுது தான் அவன் கோபம் எல்லாம் அமெரிக்கா செல்வதில் திரும்பும் - அவனும் செல்வான், என் கனவும் நிறைவேறும் என்று. இதோ கனவு நிறைவேறும் நாள் நெருங்குகிறது. ஆனால், இந்த தீபாவளி திருநாளில் என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.  எனக்காக சுமதி தன் படிப்பை தியாகம் செய்ததாகவே தோன்றுகின்றது. அவள் சந்தோஷமாக கணவன், குடும்பம் என இருந்தாலும் படிப்பை விட்டுதந்தாள் என்றே மனம் பாடாய் படுகிறது. சுரேஷுகாக சுமதி வாழ்வை கெடுத்தேனோ என்று தினமும் வருந்துகிறேன். கடவுளே! எனக்கு என்ன பண்ணுவதுனே தெரியலயே.

[அடுத்த பகுதி.... இறுதி பகுதி]

Tuesday, February 15, 2011

சுமதி வந்திருக்கிறாள் - மாங்கல்யம் தந்துனானே...

சுமதி வந்திருக்கிறாள்...

என் பெண் சுமதி. பாடம் சொல்லி தருவது, மற்றவருக்கு உதவுவது என எல்லாருக்கும் எல்லாமுமாய் இருக்க ஆசைபடுபவள். சிறு வயதில், படிப்பு, ஆட்டம் என்று இருந்தவள் இப்பொழுது, கணவன் கைபிடித்து ஒரு பொறுப்பான குடும்ப தலைவியாய் வலம் வருகிறாள். பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. சுமதியின் கல்யாணம் ஒரு கனவு போல தோன்றுகிறது. சுமதி, ஒரு நாள் வந்து, நான் கல்யாணம் செய்துகொள்கிறேன், மாப்பிள்ளை பாருங்கள் என்றாள். சுந்தரும் மிக நல்ல பையன். மனைவியை அவ்வளவு அன்பாக பார்த்துகொள்கிறான்.  எல்லாம் அவள் ஆசைப்படி தான் செய்தோம்! ஒரே மகளின் திருமணமும் நன்றாக முடிந்து ஒரு வருடம் ஆக போகிறது. அவளும் சந்தோஷமாக இருக்கிறாள்.

என் பெயர் சுந்தரவடிவு. தமிழ்நாட்டில் இருக்கும் பல லக்ஷம் குடும்ப தலைவிகளில் ஒருத்தி. என்னை சுற்றி சொந்தங்களும், நண்பர்களும் என நிறைந்த வாழ்க்கை.  இப்போது கூட, எங்கள் தெருவே சேர்ந்து தான் சுமதிக்கு தலை தீபாவளி சீர் கொண்டாட்டங்கள் செய்கிறோம்! எல்லோரும் சேர்ந்து செய்யும்போது சந்தோஷம் பல மடங்காகிறது. தெரு குழந்தைகள் பட்டாசு வெடிக்க போடும் ரகளையில் எனக்கு சுமதியும் சுரேஷும் அடித்துகொள்வது ஞாபகத்துக்கு வருகிறது. அவர்கள் இணைபிரியா நண்பர்கள். ஒருத்தரை விட்டு ஒருத்தர் இருக்க மாட்டார்கள். ஆனால், ஏதோ நடந்திருக்கிறது. சுமதி வந்த நாளிலிருந்தே சுரேஷை காணோம்! கண்ணிலேயே படவில்லை. சுமதியும் தான் அவனை பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை. ஊரில் காய்கறி விற்கும் பாட்டியிலிருந்து பேப்பர் போடும் சண்முகம் வரை விசாரிப்பவள், சுரேஷை பத்தி கேட்காதது ஏதோ செய்தது. தாய் அறியா சூல் இல்லை தான். ஆனாலும், மனதை அரிக்கிறது. சுரேஷ் அம்மா சாரதாவை கேட்டால் அவளும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஏனோ முகம் வாடி தெரிகிறாள். என்னவென்று கேட்டால், தலைவலி, கால் வலி என்று சொல்கிறாள். சுரேஷ் அமெரிக்கா செல்லும் கவலையாய் இருக்குமோ? என்னவென்று தெரியலையே, முருகா! எல்லாரையும் இந்த தீபாவளி அன்னைக்கு சந்தோஷ படுத்து!

Friday, February 11, 2011

சுமதி வந்திருக்கிறாள் - கனா கண்டேனடி, தோழி!


சுமதி வந்திருக்கிறாள்...

எங்கள் தெரு சுமதி. என் ஆருயிர் தோழி சுமதி. சிறு வயதிலிருந்தே, ஒன்றாக படித்து, ஒன்றாக வளர்ந்து, ஒன்றாக விளையாடியவர்கள். என் முதல் வெற்றி, முதல் தோல்வி, முதல் அடி, முதல் சண்டை, முதல் காதல், எல்லாவற்றுக்கும் கூட இருந்தவள் சுமதி. அவள் அம்மா போல, எல்லாருக்கும் உதவுவாள். காலேஜில் தன் சிநேகிதிக்கு பீஸ் கட்ட தன் வளையலை தந்து விட்டு வீட்டில் அடி வாங்கியவள். இவ்வளவு நல்லவளுக்கு இப்படி ஒரு நிலைமை! நினைத்தாலே நெஞ்சு கொதிக்கிறது.


என் பெயர் சுரேஷ். படித்து விட்டு ஒரு IT கம்பெனியில் வேலை செய்யும் இருபத்தைந்து வயது இளைஞன். அடுத்த சில வாரங்களில், அமெரிக்கா செல்ல போகிறவன். இந்த தீபாவளி, சுமதிக்கு தலை தீபாவளி. எங்கள் தெருவே சேர்ந்து கொண்டாடுகிறது. ஆனால், என்னால் தான் முடியவில்லை. எப்படி, எப்படி ஒத்து கொண்டாள் சுமதி? எவ்வளவு கனவுகள் கண்டிருப்போம் சேர்ந்து? எல்லாம் மண்ணாக போனதே? சுமதி அம்மா சுந்தரவடிவுக்கும் என் அம்மாவுக்கும் கூட எல்லாம் தெரியும். இருந்தும், சுமதியை force செய்து, கல்யாணம் செய்து வைத்து... ச்சே! எனக்கு சுந்தரை பார்த்தால் தான் பற்றி கொண்டு வரும். அவன் எல்லாம் ஒரு மனிதனா? எப்படி சுமதியின் கனவுகளை கொன்று விட்டு வாழ்கிறான்? ஆனால், அவனை சொல்லியும் குற்றமில்லை. நல்ல பெண், நன்றாக படித்திருக்கிறாள், பார்க்கவும் நன்றாக இருக்கிறாள். யார் தான் கட்டி கொள்ள மாட்டார்கள்? சுமதியின் அம்மாவுக்கே அவள் கனவில் அக்கறை இல்லாதபோது, எவனோ ஒருவன் எப்படி அக்கறை காட்டுவான்? எப்படி தான் சுந்தரவடிவு ஆன்ட்டிக்கு சிரிக்க முடிகிறதோ! பண்ணுவதெல்லாம் பண்ணி விட்டு, சிரிப்பை பார்!! அதெல்லாம் பார்க்க முடியாமல் தான் அம்மா எவ்வளவோ சொல்லியும் இந்தியாவில் கடைசி தீபாவளி என்று தெரிந்தும் கிளம்பி விட்டேன்! எங்கள் கனவெல்லாம் சுந்தரவடிவு ஆன்டியால் வேஸ்ட்ஆ போச்சு. இப்போ அவங்க என்ன பண்ணிட்டு இருப்பாங்க? நல்லா மாபிள்ளையை தலையில் தூக்கி வச்சுட்டு இருப்பாங்க. ச்சே!

Thursday, February 10, 2011

சுமதி வந்திருக்கிறாள் - ஒரு ஊரில் அழகே உருவாய்...

சுமதி வந்திருக்கிறாள்...

எங்கள் பக்கத்துவீட்டு சுமதி. எனக்கு கணக்கு பாடம் சொல்லி கொடுத்த சுமதி.... சொல்ல போனால், சுமதி அக்கா! ஆனால் அக்கா என்று சொல்ல கூடாதுன்னு ஆர்டர். சோ, சுமதி தான் எங்க எல்லாருக்கும்.

என் பெயர் வாணி. சுமதியிடம் கணக்கு படித்து நூறு மார்க் வாங்க முயற்சித்த பதிமூன்று வயது பெண். ஆனால், அதுக்கு ஹெல்ப் பண்ணாம சுமதி கல்யாணம் பண்ணிட்டா. இப்போ, தலை தீபாவளிக்கு சுமதியும் சுந்தர் அண்ணாவும் வந்து இருக்காங்க. அவங்க தலை தீபாவளி கொண்டாட்டத்துக்கு எங்க தெருவே சேர்ந்துகிச்சு. எங்க தெருல எல்லாமே அப்படி தான். நாள் கிழமை, நல்லது கெட்டதுன்னு எல்லாமே சேர்ந்து தான் பண்ணுவோம். அப்படி ஒரு ஒற்றுமை எல்லாருக்கும். சுமதியோட அம்மா சுந்தரவடிவு தான் எல்லாருக்கும் பெரியவங்க. எல்லாரும் அவங்க கிட்ட கேட்டு தான் decisions எடுப்பாங்க. பட்டாசு, பக்ஷணம் எல்லாம் ரெடி. என் friends பிரியா, தனா, அருண் எல்லாரும் கூட வந்தாச்சு. ஆனா, சுரேஷ் அண்ணா எங்க? தீபாவளினா பட்டாசு, ராக்கெட் எல்லாம் ரெடி பண்ணுவதிலிருந்து எங்களுக்கு turns தருவது வரைக்கும் சுரேஷ் அண்ணா தான் பண்ணுவாங்க. ஆனா, இன்னிக்கு அண்ணா வேலைக்கு  போய்ட்டாங்கன்னு சாரதா ஆன்டி (சுரேஷ் அண்ணாவோட அம்மா) சொன்னாங்க. ச்சே! சுரேஷ் அண்ணா இல்லாம தீபாவளி தீபாவளியவே இல்லை! அருண் அப்பாவும் சுரேஷ் அண்ணா கம்பெனில தான் வேலை பண்றாங்க. அவர், கம்பெனி லீவ்னு சொன்னார்! சோ, சுரேஷ் அண்ணா எங்க?

Friday, January 14, 2011

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

இந்த ப்ளாக்ல பண்ண ஒரு ரொம்ப நல்ல காரியம், comment moderation தான்! எவ்வ்வ்வ்ளோ spam... already 55 comments spam heading ல இருக்கு... இது ஒரு டைப் போகி தான்.. virtual போகி.
இன்னைக்கு, எல்லா மெயில் IDs, மற்ற பல virtual தளங்களையும் சுத்தம் பண்ணி, சுத்தம் சோறு போடும்னு follow பண்ணுவோம்.
அனைவருக்கும், இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
முடிஞ்சவங்க, கரும்பு தின்னு, பொங்கல் வச்சு, ஜல்லிக்கட்டு பாத்து, கொண்டாடுங்க!
முடியாதவங்க, சன் டிவி, விஜய் டிவி ஸ்பெஷல் ப்ரோக்ராம்ஸ் பாத்து கொண்டாடுங்க!
அதுவும் முடியாதவங்க, ஆன்லைன்ல அதை எல்லாம் பாத்து என்ஜாய் பண்ணுங்க!

Tuesday, December 21, 2010

சும்மா சொல்றேன் சிதம்பரம் - 2

மக்கள் ஏன்பா facebookல பிறந்த நாள் போட மாட்டேன்கறாங்க?
அப்புறம் ஏன் wish பண்ணலன்னு feel பண்றாங்க?
ஒன்னுமே புரியல உலகத்துல!

Monday, December 20, 2010

சும்மா சொல்றேன் சிதம்பரம் - 1

சீசரின் மனைவியாய் இருக்க ஒரு தகுதி வேண்டுமெனில் சீசராய் இருக்கவும் ஒரு தகுதி வேண்டும்.

PS: அப்போபோ எதாவது தத்துவம் தோணுது/படிக்கறேன்/பாக்கறேன்... அத சொல்லி மக்களை படுத்தலாம்னு ஒரு நியூ ஐடியா. அதான் இப்பிடி எல்லாம்... ஹி ஹி. 

Saturday, July 10, 2010

தேவைகள் தேவைப்படுகின்றன

தேவையற்றது தேவையாகும் போது
தேவையானது தேவையற்றதாகி விடுகிறது
தேவைகள் தேவைபடுபவயாகவே இருத்தல் வேண்டும்
இல்லையெனில்
வாழ்க்கை தேவையற்றதாகி விடும்

Wednesday, April 21, 2010

Home run

I was in India last month for a much needed vacation (not that I'm working too hard in Neverland, but its been past due to go home). It was a refreshing and complete break so much so that I forgot the password for my work computer and seriously considered resetting it. This break was unique in that I did a large number of smaller trips (unlike other times), met some friends after a long time and experienced Indian summer at its best. God did not create mangoes and nungu (the kernel of palm tree) and tender coconut without reason!

Thanks to my family and friends, I had an awesome time in India. And most importantly, I rediscovered thinking in Tamil :) It might sound silly to many since Tamil is my mother tongue and I should effortlessly be able to think in Tamil. But I've become so comfortable with English that I prefer thinking in it. Given a chance to express what I think and feel, I'd choose English over Tamil. Being out of Tamilnadu also didn't help much though I try keeping in touch with Tamil through movies, books, blogs, talking to friends, etc. However, it wasn't adequate. The immersive experience I had this time has made a dent into it. I found that there were certain Tamil words that didn't have exact translations in English. I'm sure that is the case with other languages as well but I'm yet to come up with unique words of English or Telugu or Malayalam or Kannada (with me having limited resource of words in the last three) that cannot be adequately expressed with words in Tamil. Beware, I'm not talking of technology related words like pendrive, wireless, etc. that are best expressed in English because they are recent additions to the languages themselves. They originated in English and are catching up in other languages as well.

At first glance, I can think of words in Tamil like நூதனம், வாயாடுதல், ப்ராப்தம், etc. The closest matches I find for them in English are 'new and subtle'(with more emphasis on the new part), 'the act of talking' (though this doesn't bring out the beauty of that word), fate ( In general, this is a good translation but I'm not very happy with it because fate is a strong word while ப்ராப்தம் is way softer... ). Can you come up with any words that are unique in Tamil or English?
   

Monday, October 05, 2009

Happy Fall :)

பச்சை பட்டாடையில் மஞ்சள் முத்துக்கள்
பவழ கொடியினிலே மல்லிகை மொட்டுக்கள்
தென்னாடன் குலமகள் பார்க்க
தென்றலது வீசி வர
இளம்குளிர் காலம் வந்ததம்மா!
இனிய சுகம் தந்ததம்மா!


மாய உலகில் மயங்கும் மான்கள்
மூடு பனியில் முகிழும் மலர்கள்
தீபங்கள் அலங்கரிக்க
தூபங்கள் கமழ்ந்திட
சில்லென்ற குளிர் காற்று வந்ததம்மா!
சிந்தையில் மகிழ்வு தந்ததம்மா!

PS: I wrote this one when waiting at a traffic signal. The drive from home to office is one of my favorites with trees turning yellow, golden and red. Its like an beautiful arch that the angels created just for us :) Fall is the best time with the world becoming colorful all at once. Happy fall times, everyone!

Thursday, September 17, 2009

தாலேலோ!

உயிரோடு அவன் இருக்கையில்
உறவுகள் எல்லாம் தொலைவில்
உயிரற்ற உடலானதும்
உயிலுக்கோர் போராட்டம்

ஊகங்களும் கேள்விகளும் பல பல
உண்மை ஆடுது கண்ணாமூச்சி ஆட்டம்
உலகே அவனுக்கு அஞ்சலி செய்ய
உறக்கத்தில் சிரிக்கிறான் தாலேலோ!

PS:I wrote this for for MJ, King of Pop the day he died! Still miss some of his songs. I keep watching the drama going on around MJ's death, as shown on Larry King's show. Totally sickened by it as a common person. And the poem is more apt now [wry smile]. I'm sure MJ is ROTFLing somewhere in this big broad Universe at all the things going on here. RIP!

Saturday, September 12, 2009

Another step to adulthood

உயிரென கருதும் உறவுகள் இல்லையெனில்
உலகமே இருந்தும் என்ன பயன்?

Wish my family was with me, as I take a bigger step to adulthood! Missing you loads, guys!

Wednesday, April 29, 2009

போனால் போகட்டும் போடா!!

I might hit myself on the head later for writing this post today. But, I'm still going to write it. Yesterday, I was all strung and needed a friend to take me to coffee and give some gyan (அதாங்க, அறிவுரை!). I even started writing a post about the list of things I was glad for (ugh! what was I thinking? I mean I can write such a list but it was dripping of sap, I tell you!). Something sane stopped me from actually publishing it and becoming the laughing stock of my blog world.

Today, I'm all fine and ready to handle the matters of the world. The day started with some code handover (என் code படிச்சா எனக்கே immediateaa புரியாது (genius code னா அப்டி தானு சொல்றீங்களா? அதுவும் correct தான் :D), இதுல என் ஆசிரியர் அத படிச்சு புரிஞ்சு... ஒரே கூத்து தான் நடக்க போகுது!) followed by a presentation session. Finally, I was confident that I can do well in the D-day (இன்னைக்கு தான் நானும் pass ஆவேன்ர நம்பிக்கை வந்து இருக்கு... நேத்து வரைக்கும், செம பயம் தான்! அதான் sappy mood!). Now, here I am, sitting in the library (one of the least used spaces during my grad life; more on it later) with an iced tea in hand and trying to remember what else I need to get done.

Some senti stuff: I saw a friend of mine (அவங்களுக்கு என் பாட்டி வயசு! அப்டியே என் பாட்டி மாதிரியும் இருப்பாங்க... ஆனா, friendnu தான் சொல்லணும்) today and got all the more confident (ஒரு நெனைப்பு தான்! பாட்டியே வந்து "நீ நல்லா tear பண்ணிடுவ"னு சொல்றது போல இருந்தது). Also I saw exactly 3 CGs but yet to see my favorite one still(I don't think I'll see my fav CG for its been a rare sight to do so this sem! But the day is still not over! ) (Normally, 3 per day is a high rating for my university. Either, its the day or my mood or the weather!!) .

I got to finish some stuff at the library and am sitting in the till-now-never-used-by-me alcove in a plush chair (இந்த super எடத்த இவ்ளோ நாள் miss பண்ணிடெனேனு இப்போ செம feelingaa இருக்கு. சரி அதுக்கு என்ன பண்ண முடியும்? இன்னொரு semaa படிக்க முடியும்? போனால் போகட்டும் போடா தான்!) And, I had this attack of non-library-usage-in-the-past-two-years. I would've taken more story books and novels from here than tech books (I refer tech books online. எப்டி தான் அந்த காலத்துல, மக்கள் libraryku வந்து books எடுத்துட்டு போய் refer பண்ணி research pannangalo? Research flow மறந்து போகாதா? இருக்கிற எடத்துல இருந்துட்டே, googlela search பண்ணி, மறுபடியும் codea பார்த்தா, எங்க பார்த்தோம் எதுல விட்டோம்னு யோசிக்க வேண்டியதா இருக்கு... இதுல libraryku போய், தேடி எடுத்துட்டு வந்து, research code adikarathuna, அப்றோம் நான் degree வாங்க, atleast 5 yearsaavathu ஆகும்... அந்த காலத்து மக்கள் great தான்! நம்ம generationku தான் attention diversion ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு! ஹ்ம்ம்! எல்லாம் technologyoda side effects தாங்க! நம்ம சொல்லி குத்தமில்ல!) and have been introduced to various new authors(from Russian to Korean to African). I wouldn't have explored their writing unless I had a ready place to do so.

But, seeing the thousands and thousands of books neatly stacked in shelves over 6 floors gives me the guilty feeling of not having used even a millionth of these available resources. (நான் இதெல்லாம் use பண்ணாமயே படிச்சு passum ஆக போறேன்! கஷ்டம்! சரி, எல்லாம் ஒரு talent தானு வச்சிகோங்க!) But as I think of other resources like the GamePlace, GymPlace, EatPlace, LabPlace, GradPlace, Buildings and ConfPlace (I've changed the names of it all - யாரும் இப்டி எல்லாம் பேர் வைக்க மாட்டாங்க - இது என் Neverlandla மட்டும் தான் இருக்குது - copyright, சாட்ஷாத் நானே தாங்க!), I see that I've not really used any of their resources fully. True! I've used some more than others and some less. But not all of it! (குடுத்த காசுக்கு use பண்ணோமா, இல்லையே? இதுல, சில பில்டிங்கு உள்ள எல்லாம் போனது கூட இல்ல - coz அந்த majorkum எனக்கும் ஸ்நான ப்ராப்தி கூட இல்ல.)

But I also think that I've spent all the two years in grad life to the hilt. I've had fun in all those places. Conclusion: Though the resources are available, my usage of them is limited by my time, priorities and the opportunities that come through. I have memories of all of them and its these memories that would keep me linked with Neverland. Love Neverland!

[அட! அட! அட! என்ன conclusion! புல்லரிக்குது! Effect of thesis work! But still, எல்லாம் உண்மை தாங்க. இந்த enjoyment periodla, சிலது எழுதி இருக்கேன், பலது எழுதினது இல்ல. இனியாவது எழுத idea! வெட்டி Officera இருக்கிற போற timela இதெல்லாம் பண்ணனும். Atleast எழுதலைனாலும், கொஞ்சம் நெறைய round அடிக்கற வேல வச்சு இருக்கேன்! So, எல்லா இடமும் போய் நல்லா பார்த்துட்டு, ஒரு good bye சொல்லிட்டு வந்தா தான் மனசு ஆறும். இனி வர்ர கொஞ்ச நாள், ஒரே மலரும் நினைவுகள் postaa தான் இருக்கும் nu பக்ஷி சொல்லுது. எல்லாரும் அத poruthukonga. முடிஞ்ச அளவு மொக்கையா இல்லாம பார்த்துகறேன்!]

PS: [இன்னும் கெளம்புவேனா, இல்ல இங்கயே settle ஆவேனானு தெரியல! அது D-dayku அப்றோம் தான்! ஆனாலும், pass ஆயிடுவோம்ற நம்பிக்கைல, அடுத்து என்ன பண்றதுன்னு மூளை இப்போவே பிளான் பண்ணுது! என் ஆசிரியர் இத பார்த்தா, tension ஆயிடுவார். ஏன்னா, அவர் எனக்கு வேற வேல வச்சு இருக்கார்! அது ஏங்க, நமக்கும் நம்ம ஆசிரியருக்கும் sync ஆகவே மாட்டேன்து? ஸ்டில், எதுக்கும் ஒரு குட்டி plan நல்லதுதானே? இதெல்லாம் think panrapovae, சீக்கிரம் வேலைய முடிக்கணும், இதெல்லாம் பண்ணனும்னு தோணுது... still, பாப்போம்! D-day வந்தா தான் தெரியும்!]

PPS: [எல்லாரும் கடவுள்ட நல்லா வேண்டிகோங்க. உங்க Alpine, சீக்கிரம் நல்லபடியா pass ஆகனும்னு! Will keep you posted!]

Saturday, February 21, 2009

Practice makes perfect

I've seen so many grad students and friends who think that they need to be perfect in everything they do. For some non-understandable reason, this is more apparent in girls than guys. I've known girls who are so much of a "perfect home" freak that I really don't want to go to their houses for partying. We try not to have their houses as party venues simply because those friends(yeah, the neat freaks) would never completely relax and would be surreptitiously glancing at all that the guests do. If someone spills some juice or food, even before the person who split it realizes it and gets a paper towel(most of my friends are humanly clean - and that is a BIG statement for grad students), they'd be there with the paper roll. At best, it doesn't let us relax too. At worst, it creates unnecessary friction. Anyways, there are also others who just don't turn in papers or projects till the last minute simply because they are perfecting the draft. There are some extreme cases where people think about doing something perfectly but are afraid of turning in a good work; they want their work to be perfect with every i dotted and every t crossed. The sad thing is they finally don't get to do even moderate work. Lots of sophomores and juniors would attest to this fact.

I'm not sure if people start becoming complacent once they leave school for I've not heard about many people at work bothering so much about perfection. But one of my friends says that there is a guy in her office who never gives presentations to his group about his work because he wants to give the 'perfect' presentation. His manager is tired of asking him to do the presentation and finally went around to assign him work with another person as a smaller team. My friend says that being in that smaller team is hard because that guy expects perfection in every step and would never let the project complete at the right time. It would inevitably get delayed and they'd rush through in the last minute producing a poorer quality work. But the irony of it all is that the guy would blame the teammate saying that the poor quality work was because they didn't concentrate on perfection in every step. Working with him is a sure stress-inducer! My friend had the misfortune of being his teammate last year for one of the projects and she went from being a calm person finishing work at the correct time to someone highly stressed. Thankfully, she is out of the project now. Her lessons from it were to factor in extra time and to clearly demarcate the responsibilities even inside a two member team. When she recounted this experience, I was reminded of the following story.

"The ceramics teacher announced on opening day that he was dividing the class into two groups. All those on the left side of the studio, he said, would be graded solely on the quantity of work they produced, all those on the right solely on its quality. His procedure was simple: on the final day of class he would bring in his bathroom scales and weigh the work of the “quantity” group: fifty pound of pots rated an “A”, forty pounds a “B”, and so on. Those being graded on “quality”, however, needed to produce only one pot — albeit a perfect one — to get an “A”. Well, came grading time and a curious fact emerged: the works of highest quality were all produced by the group being graded for quantity. It seems that while the “quantity” group was busily churning out piles of work - and learning from their mistakes — the “quality” group had sat theorizing about perfection, and in the end had little more to show for their efforts than grandiose theories and a pile of dead clay."

So, practice makes perfect is a true adage. Stop theorizing your ideas and start "doing" it. I recently spoke to a friend and he said that he always want to do something. That is a good attitude. Do well or do moderately ok or even do badly, but do it. Like the tamil adage
"Chithiramum kai pazhakkam,
senthamizhum naapazhakam"
(The picture becomes perfect as you keep drawing it,
your tamil becomes perfect as you keep speaking it),
as you do something, you'll become more confident, you'll know how things are done and finally will achieve that excellence that you are aiming for. Just remember this: no one came into this world knowing everything that they do today. Everyone learned things only after being born. When someone else can do it, you can too! So, why wait? Do that project that you've been procrastinating for the past few months now. As time goes by, you'll see that you do more and more in your life; You'll be more satisfied with the entire outcome. And you'll finally reach that "perfect" thing, presentation, pottery and anything else!

Sunday, June 15, 2008

Dasavatharam - Review

I usually don't write a review of a movie. Three simple reasons: 1) The movie is not so impressive or I have nothing new to add to what has been said already 2) I don't watch movies often(yup! I'm NOT a movie fan. If I watch five movies in a theatre in a year, my family and friends would be so surprised because I just don't watch them in theatres!) 3) I usually thrash out a movie with friends or family after watching it(usually, my sister ends up being the scapegoat where she would patiently listen to me analyzing each scene and each angle of the story. Sometimes its good(like in Gajini), sometimes its bad(like in Om Shanti Om) but all the time,its interesting!) But now that I'm stuck in S____ and the first condition got satisfied, here goes the review of Dasavatharam.

Basically, its a good movie but turns bad and then worse as more and more masala is added to it. Kamal is a versatile actor, there is no doubt in it. But he has tried to do too much in the movie. He has discussed everything from politics to religion to science to what not!!!??? Even in each of these categories, he has taken pains to cover each part(or atleast a sliver of each part). For example, in politics, he has used Bush(yup! the very same American president), Dr.ManMohan Singh(yeah, our Indian prime minister), both our CMs(now and then). I fully expected him to bring in or atleast talk about all the problems of the world(like sand burglary). Thankfully he stopped with this array. In religion, he made sure he covered the Saivites, the Vaishnavites(two major sects of Hinduism), Christianity and finally Islam. In science, he went all the way from Biology to Chemistry. And he added the Japanese guy for .........? For what? To create a fan club for him in Japan(just because Rajini has one)?

I like each of the characters that Kamal portrays(I bow for his excellence in acting, but that's about it. I know I might draw flak from Kamal fans but this is my opinion and this is a free world! So, no comments on this statement please!) but my favorite character is Mr.Balram. He is so natural and the character fits Kamal like a glove. The ones with Bush, the old lady(who incidentally likes rose milk and reminded me of the glorious days of summer break where I did nothing but drink rose milk, play in the hot sun, eat icecream and finish a story book a day! Sigh! Now, I just can't imagine a summer like that any more in my life!), Kallif Ulla, Fletcher(Man! Terminator in tamil ;)) were kind of artificial and showed too well that it was pure makeup. It reminded me of someone wearing a mask and acting. Guess the field of makeup hasn't grown to such a level as to what Kamal expects. But its a good effort! And the Vincent character is good as well but it could have been given more screen space. About the first Ramanuja Daasan, his acting was good if a bit too theatrical.

About the story, there was nothing much in it, right from the beginning. It reminded me of some novel where every character hurries every minute only to leave the reader wondering why all this hurry. Similarly, here, the reason to hurry was not captured and delivered properly to the viewer (unlike Kaaka Kaaka or Vettaiyaadu Vilaiyaadu where the viewer can understand the urgency within a scene!) Here, everyone seems to rush all the time but there is no deep meaning for it all. A short version of the story is that Kamal discovers a virus that can kill everyone in minutes and leave the Earth barren and his boss decides to sell it to terrorists. After a melee(I'll tell you, it was neither hilarious nor gripping! It was similar to Race, the movie where it was confusions galore), Kamal reaches Chidambaram followed by Fletcher(another Kamal, the villain) followed by Balram (another Kamal, the ubiquitous law man) followed by a Japanese(God knows why this guy is there in the movie because all he does is to come on in in the end and fight Fletcher, which Kamal himself could have done(given that loads of tamil heroes manage to do it with ease) Or maybe he was aiming to keep the movie natural? Only Kamal should tell) where he meets Asin(who, by the way, is portrayed as a staunch Vaishnavite and says "Perumaalae!"(Lord's name) every minute. But this turns irritating after some time.) and her granny(another Kamal). Now a chase begins where everyone chases in the above given order and finally Tsunami comes to finish up the unfinished business of the humans.

Now on to why I think the movie can't go into must watch list. Simply put, the movie doesn't give time to the viewer to actually get into the story. It starts in US, then chases begin, then moves to India, then chases go on, then climax. What IS happening? A lady before me in the theatre actually asked her husband this question! LOL!

Secondly, each character has been etched too hurriedly and everyone jostles for screen space with the result that no one gets enough to do justice to their roles and finally confuse everyone(now what was the Muslim family doing in the movie? Too many extra characters like that! It reminds me of "I want a share in the apple pie" story and finally everyone gets a crumb and no one is satisfied!). Even Asin seems to have been added to each scene rather than being part of the story flow. Atleast there should have been some good scenes between Kamal and Asin. It finally looked like they kept running all the time and he fights to save her and everyone thinks they go together and she falls in love even though his principles about God are the exact opposite to what she believes. I can take some amount of comedy, but this is atrocious!! Also, talking about life and love in a superficial manner when tsunami has struck is all the more comical!! Maybe that is why they didn't have a separate comedy track in the movie? Its so cruel to use Mallika Sherawat as done in the movie and kill her even before she tries to act(now you can't blame her for poor acting if her character gets killed after a song and a few other shots, can you?)

Third, some of the characters are so out-of-storyish that I just feel that they have been added to the story just to add another character to Kamal's doable characters list(like Avtaar Singh, Fulla, etc). Fourth, there are loads of double entendres in the movie and its kind of difficult to explain kids as to why the audience laugh for a particular sentence when they don't find anything odd or funny in it. I know that it is expected in a Kamal movie (in any movie nowadays, for that matter) but this one had loads(or is my movie watching skills so low that I don't know the present count/trend? If so, I feel sad for the present teens and pre-teens. They have work cut out for them in keeping their innocence and enjoying childhood and adolescence as much as they can)

Finally, I feel as if they've assumed that every person who watches this movie doesn't have basic sense and would accept everything that is dished out as a movie(just because we pay $20 doesn't mean we have to accept all the crap that is given right? Or is it that we are expected to keep our common sense at home when we go to watch movies? This, especially, disappoints me in this movie! I expected better from Kamal Haasan's movie). Example: the bullet from Fletcher's gun hits the cancerous growth in Avtaar Singh's throat and cures him of cancer without need for surgery while miraculously saving his voice and keeping everything else intact. Nalla kaathula poo sutharaangayaa!!

All said and done, this movie is watchable once but not more than once unless you are a film student and want to know how to act even with a makeup mask on you. This is a simple case of "Too many cooks spoiled the broth". Too many things said in three short hours made sure nothing reached the audience, or at best a garbled message reaches them. Want to know how to etch each character and still do something like acting 10 roles in one movie? Watch Navarathri by Sivaji Ganesan. Now, that is a movie! The lead actress(Savithri (thanks for pointing the error, G!)) leaves home on day one of Navrathri and meets eight different Sivajis and returns home on the tenth day to marry the ninth one. Every character adds some meaning to the movie and there is a good flow in the storyline. And each character, ranging from the inspector to the doctor to the skit maker to the terminal patient, has been done so perfectly and is so amazing. We just can't say that one character has been given more attention than the other or has been protrayed better than the rest. Everything was so good and it was all done with lesser makeup! I guess that is why Sivaji is still considered to be among the best of the best when it comes to acting and Kamal is still trying to reach there!

Saturday, December 29, 2007

Newyork Nagaram, Pittsburgh Payanam

[For english translation, check the post below]
Enna makkalae, nalla irukeengala? Ennada tamizhla elutharaalaenu paakareengala? Ennatha solrathu, ellam en neram! Nunalum than vaayaal kedum apdingara pazhamozhiku naan thaan best example. Oru friend kitta tamil pathiyum tamil blogging pathiyum pesitu irundhen. Appo, he said, sorry sorry... avan sonnan, tamil blogging kashtamnu. Namma thaan oruthar oru vishayatha sonna, totally opposite vishayathukku support(ithukellam enakku tamil vaartha theriyaathu... Article 178 padi, indha vaartha ellam tamil colloquial languagela mix aayiduchu… athanaala, nadu naduvula English vaartha vandha kandukka koodaathu.. naan enna Kamban parambarainna sonnen… sutha tamil blogging(paarunga paarunga! Ithu kooda English vaartha thaan! Aama, bloggingku aptaana tamil vaartha ennanga?? Yaaruchum therinja sollunga) panrathukku? Etho enakku therinja tamilla eluthi irukken... tamil periyavanga periya manasu panni mannikanum!!) panni pesuvomla! Adhula vandha venai... ungalukku micha story sollanumaa? Avan enna oru tamil blog elutha solli challenge panna, naanum atha othukka, adhula vandhadhu thaan indha post(indha thabaal???? Indha postum andha postum vera thaan.. aana, post na thabaal thaana?? Ippadikku Kelvinayagam :D (ellam namma maruthanaayagam effect :) ) En naakula Saturn sutharaar!! Adhula vandha venai idhu!

Ok! Topic ku povom! Aruthathu pothum alpine nu neenga katharathu en kaathula ketkuthu.. Indha vaaram, naan enga oorla irundhu, Newyork pona kathaiyum, anga irundhu pittsburg pona kathaiyum solren. Newyork pora idea rendu maasamaavae irundhadhu... Aana ticket thaan vaangala(yaaravathu kooda car ride pogalaam, illa train/bus try pannalaamnu oru idea... inga vandhu flightla poi poi aluthu pochu.. seri, seri... scene ellam podaratha niruthikaren... aana, adhukku serthu pattuten.. next time, olunga naanga ticket edupomla!)... winter break pakkathula vara vara veetla ore pressure.. epdi newyork pogarenu... naan enna newyork mayoraa? Ellathayum muthalayae plan panni security ellam tharathukku? So, kadaisi naal varaikkum enakku enna date, enna timela poga porennu theriyala. Yaar kooda poga porennum theriyala. Finally, oru friend kooda car ride panni Washington vandhu, anga S kooda oru car chase panni, train(Amtrak) pudichu, ticketa vaangi(adhuvum anga vandhu walk-in ticket thaan vaanginen! Naanga gethulla!!) vandhu trainla utkaandhaa.... Oru seat number kooda ticketla illa! Aana, trainla ellamae seat number padi thaan irundhadhu. Train kelamba innum pathu nimisham thaan irukku! Already car chasela naan oru trainna vittuten.. indha train poi seravae 12.30 am(aamanga, nadu raathri 12.30 thaan!) aagum. Adutha train, 3 am ku thaan poi serum. En uncle enna washingtonlayae kuppa kotta solliduvaar, kaduppula! Enna da ithu vambaa pochunu paatha, en oru carry on bag(adhu plastic bag!) vera piyyara nelama! Aprom, oru vazhiyaa kettu seatla utkaandha, phone mela phone! Ellam namma friends and cousins thaan! NY poitenna illayaanu paaka!! Ovvoru callum return panni konjam kadalai pottu, seri erangalaamnu paartha train half an hour late! Paavam en uncle! Andha kulirla arai mani neram wait pannar. Aprom, veetukku poi, three days, nalla saaptu thoongi games aadi kalichutten(rest edukattumnu auntyum uncleum oru velaiyum panna vidala! Naan onnum vetti murikalanu enakku thaana theriyum!! Aanaalum, nalla thoonga chance kedaichathaala naanum vittuten(oru vaarama, exams, partyingnu daily two three hours thaan thoonginen! So, caught up on sleep))

Aprom, rendu friendsoda, I went to NY city(S & S). Anga, first shopping thaan panninen! Macy’s, H & M’s, Tiffany’s, Saks.... onnum vittu vaikala! Koodavae, Times square, Madison Square, Rockfeller centre, anga summa irukkaama ice skating oru mani neram, Christmas decorations, konjam photos ellam pannen! Aprom, next day, NY pass vaangittu, we went to downtown NY, Greenwich village, SoHo, Little Italy, Chinatown, NY College of Arts, Statue of Liberty(Oru awe-inspiring vishayam adhu.. vera postla atha pathi solren), Ellis Island, Ground Zero(namma World Trade Centre irundhadhae, adhu thaan), Wall Street, sila pala church gal, ellam... aprom, anga oru caricature vaanginen(ennoda caricature thaan). Adhula thaan naanum NY ponenrathukku oru indelible mark nadanthadhu.. perusa onnum illa... en wallet tholanju pochu!! Enga pochu epdi pochu onnum theriyala! Aprom, avasara avasaramaa ella cardum cancel panninen(Wachovia kaaran uyira vaangitaan! Naanae card tholainja tensionla irundha, appo thaan oru vandi promotional message tharaan! Eriyara neruppula ennaiya vitta maathiri!! Avanukku irukku, naan oorukku ponathum!). Aana, en ID cards, en drivers’ licenses(indha oor, andha oor ellam thaan), en pendrive, konjam kaasu, sila pala nyaabakaarthamaana vishayangal, etc etc ellam pochu.. Oru pakkam varutham, innoru pakkam “seri, puthu varushathulla ellam puthusaa aarambikka thaan pola irukku” apdinu oru nenaippu(talk of the eternal optimist!!), innoru pakkam veetla enna solvaangalonnu oru chinna bayam(enna en kitta 10 paisa, sorry sorry, 10 cent kooda illa, oru id card kooda illa… aprom, bayapadaama, ‘vaama Jansi Rani’na solvaanga ?) Nalla vela, en kooda friends irundhaanga ! vandhu train ethi vittu konjam kaasum kuduthu, anuppi vachanga. Enga plan, anaikku, brooklyn porathu... aana, indha kalaebarathula, naan mood out aagi, veetukku pona pothumnu decide panniten! So, second day nalla kolandhaiyaa I came home at 7 pm.

Third day, aunty kita oru puthu walletum uncle kita kaasum vaangitu, again NY ponen (namma, Gajini Mohammedu fan illa! Thirumba thirumba padai yeduppomla!) That day, Madame Tussauds(namma Gandhi thaathaavoda, Lincoln maamaavoda ellam photo eduthen), Ripley’s Believe it or Not!(ellarum poga vendiya edam ithu), American Natural History Museum(sakkaiyaa irukku! Ore oru periya balla vachuttu, oru universayae kann munnadi kondu vandhutaanga! KD, nee paarka vendiya edam ithu!), Central Park, Empire State building(ithu thaan highlight of the NY trip!), ella broadway theatres, avenues, broadway, main streets, ellam paarthen. Ithula, S ku night time NYa empire state buildingla irundhu paarkanum oru aasai! Seri, athayum pannuvomaenu wait panni, paarthuttu vandhom. Weekendkarathaala, train frequency kammi. Ithula oru train vera miss panniten. Veetukku poga 11.30 pm aayiduchu. En uncleum auntyum thaan konjam tension aayitaanga(ennada iva! Oru naal, 12.30ku varaa, innoru naal seekiram vara, aana oru vandi shopping panni irukka, innoru naalum seekiram varaa, aana pursayae tholachutta, seri kadaisi naal endha prachainaiyum illama varuvaanu paartha(en kitta thaan neraya selavu panna kaaso credit cardo illayae!), ivlo lateaa varaa nu nenaichirupaanga!) Aana, romba nallavanga! Onnumae sollala! Romba cool aunty and uncle!! En cousins thaan kindal adichu gaali pannitaanga! :)

Aprom, rendu naal rest eduthuttu, we went to a Christmas party! Anga, night ellam enjoy pannittu(ada, veetla ellarum thaan), morning Pittsburg ponom! Naan vanla thoongitae ponen! Epdi thaan auntyum uncleum thoongaamayae vandhaangalo, theriyala! Naanum, D(ava, Ms.Cornell :) )yum thoongarathula pottiyae potom. Finally, we reached Pittsburg, went to the temples, downtown Pittsburg, incline trip, some sightseeing through the view points, etc. Then there were some dances, introductions, etc.(en uncleoda friends ellarum vandhurundhaanga). We slept at 1 am. Marubadiyum morningla, Phipps observatory (super glass pieces and plants!!), Cathedral of learning, CMU, University of Pittsburg, River Cruise, Heinz stadium, shopping(anga poiyum vittu vaikala!), Celebration of Lights(adha paaka kodi kann venum! Avlo cuteaa irundhadhu), some more dancing, introductions ellam panninom. Next day, one more temple visit, aprom dosa fest(aha! Dosai smell innum kannlaiyae... sorry, sorry, mokklayae irukku) ellam mudichuttu back to NY. Adhuvum thoongiyae thaandinen. Aprom veetukku vandhu, avasara avasaramaa, pack panni, next day flight pidichu, ippo Chicago airportla utkaandhu indha posta thattitu irukken! Ippo, akka veetukku poga poren! Adhu innoru periya kathaiyaa irukkum! Vera postla solren. Adhu varaikkum, ellarum nalla New yeara celebrate panni enjoy pannunga! Puthu varushathula paapom! Vartaaa?????