Friday, February 11, 2011

சுமதி வந்திருக்கிறாள் - கனா கண்டேனடி, தோழி!


சுமதி வந்திருக்கிறாள்...

எங்கள் தெரு சுமதி. என் ஆருயிர் தோழி சுமதி. சிறு வயதிலிருந்தே, ஒன்றாக படித்து, ஒன்றாக வளர்ந்து, ஒன்றாக விளையாடியவர்கள். என் முதல் வெற்றி, முதல் தோல்வி, முதல் அடி, முதல் சண்டை, முதல் காதல், எல்லாவற்றுக்கும் கூட இருந்தவள் சுமதி. அவள் அம்மா போல, எல்லாருக்கும் உதவுவாள். காலேஜில் தன் சிநேகிதிக்கு பீஸ் கட்ட தன் வளையலை தந்து விட்டு வீட்டில் அடி வாங்கியவள். இவ்வளவு நல்லவளுக்கு இப்படி ஒரு நிலைமை! நினைத்தாலே நெஞ்சு கொதிக்கிறது.


என் பெயர் சுரேஷ். படித்து விட்டு ஒரு IT கம்பெனியில் வேலை செய்யும் இருபத்தைந்து வயது இளைஞன். அடுத்த சில வாரங்களில், அமெரிக்கா செல்ல போகிறவன். இந்த தீபாவளி, சுமதிக்கு தலை தீபாவளி. எங்கள் தெருவே சேர்ந்து கொண்டாடுகிறது. ஆனால், என்னால் தான் முடியவில்லை. எப்படி, எப்படி ஒத்து கொண்டாள் சுமதி? எவ்வளவு கனவுகள் கண்டிருப்போம் சேர்ந்து? எல்லாம் மண்ணாக போனதே? சுமதி அம்மா சுந்தரவடிவுக்கும் என் அம்மாவுக்கும் கூட எல்லாம் தெரியும். இருந்தும், சுமதியை force செய்து, கல்யாணம் செய்து வைத்து... ச்சே! எனக்கு சுந்தரை பார்த்தால் தான் பற்றி கொண்டு வரும். அவன் எல்லாம் ஒரு மனிதனா? எப்படி சுமதியின் கனவுகளை கொன்று விட்டு வாழ்கிறான்? ஆனால், அவனை சொல்லியும் குற்றமில்லை. நல்ல பெண், நன்றாக படித்திருக்கிறாள், பார்க்கவும் நன்றாக இருக்கிறாள். யார் தான் கட்டி கொள்ள மாட்டார்கள்? சுமதியின் அம்மாவுக்கே அவள் கனவில் அக்கறை இல்லாதபோது, எவனோ ஒருவன் எப்படி அக்கறை காட்டுவான்? எப்படி தான் சுந்தரவடிவு ஆன்ட்டிக்கு சிரிக்க முடிகிறதோ! பண்ணுவதெல்லாம் பண்ணி விட்டு, சிரிப்பை பார்!! அதெல்லாம் பார்க்க முடியாமல் தான் அம்மா எவ்வளவோ சொல்லியும் இந்தியாவில் கடைசி தீபாவளி என்று தெரிந்தும் கிளம்பி விட்டேன்! எங்கள் கனவெல்லாம் சுந்தரவடிவு ஆன்டியால் வேஸ்ட்ஆ போச்சு. இப்போ அவங்க என்ன பண்ணிட்டு இருப்பாங்க? நல்லா மாபிள்ளையை தலையில் தூக்கி வச்சுட்டு இருப்பாங்க. ச்சே!

1 comment:

Porkodi (பொற்கொடி) said...

romba kola veriyoda irukkapla.. rightu..