Thursday, February 10, 2011

சுமதி வந்திருக்கிறாள் - ஒரு ஊரில் அழகே உருவாய்...

சுமதி வந்திருக்கிறாள்...

எங்கள் பக்கத்துவீட்டு சுமதி. எனக்கு கணக்கு பாடம் சொல்லி கொடுத்த சுமதி.... சொல்ல போனால், சுமதி அக்கா! ஆனால் அக்கா என்று சொல்ல கூடாதுன்னு ஆர்டர். சோ, சுமதி தான் எங்க எல்லாருக்கும்.

என் பெயர் வாணி. சுமதியிடம் கணக்கு படித்து நூறு மார்க் வாங்க முயற்சித்த பதிமூன்று வயது பெண். ஆனால், அதுக்கு ஹெல்ப் பண்ணாம சுமதி கல்யாணம் பண்ணிட்டா. இப்போ, தலை தீபாவளிக்கு சுமதியும் சுந்தர் அண்ணாவும் வந்து இருக்காங்க. அவங்க தலை தீபாவளி கொண்டாட்டத்துக்கு எங்க தெருவே சேர்ந்துகிச்சு. எங்க தெருல எல்லாமே அப்படி தான். நாள் கிழமை, நல்லது கெட்டதுன்னு எல்லாமே சேர்ந்து தான் பண்ணுவோம். அப்படி ஒரு ஒற்றுமை எல்லாருக்கும். சுமதியோட அம்மா சுந்தரவடிவு தான் எல்லாருக்கும் பெரியவங்க. எல்லாரும் அவங்க கிட்ட கேட்டு தான் decisions எடுப்பாங்க. பட்டாசு, பக்ஷணம் எல்லாம் ரெடி. என் friends பிரியா, தனா, அருண் எல்லாரும் கூட வந்தாச்சு. ஆனா, சுரேஷ் அண்ணா எங்க? தீபாவளினா பட்டாசு, ராக்கெட் எல்லாம் ரெடி பண்ணுவதிலிருந்து எங்களுக்கு turns தருவது வரைக்கும் சுரேஷ் அண்ணா தான் பண்ணுவாங்க. ஆனா, இன்னிக்கு அண்ணா வேலைக்கு  போய்ட்டாங்கன்னு சாரதா ஆன்டி (சுரேஷ் அண்ணாவோட அம்மா) சொன்னாங்க. ச்சே! சுரேஷ் அண்ணா இல்லாம தீபாவளி தீபாவளியவே இல்லை! அருண் அப்பாவும் சுரேஷ் அண்ணா கம்பெனில தான் வேலை பண்றாங்க. அவர், கம்பெனி லீவ்னு சொன்னார்! சோ, சுரேஷ் அண்ணா எங்க?

2 comments:

Porkodi (பொற்கொடி) said...

13 vayasuku ivlo pecha? pesumma pesu!

Alpine Path said...

ippo ellam 13 vayasula, oorayae vithuttu vandhuranga... pechu mattumaa koraichala irukum? :)

Enna, idhu kutti thodarkathai thaane :P