Thursday, January 28, 2010

அன்பு தோழி!

அன்பு தோழி!
நலம் நலமறிய அவா
எப்படி இருக்கிறாய்? ஏனிப்படி?
மன குமுறல் ஒரு புறம்
எங்கிருந்தாலும் வாழ்க
மன தத்துவம் மறுபுறம்

காவிரி கரையில் கை கோர்த்து
கள்ளு காட்டில் கண்ணாமூச்சி ஆடி
சில்லென்ற காற்றடிக்க
சின்னஞ்சிறு கதைகள் பேசி
கழித்த காலங்கள் எங்கே?

இடம் விட்டு இடம் வந்து
இறக்கை இல்லா குறையாய் பறந்து
இயந்திர வாழ்வில் தொலைந்து போன
இதயங்களுக்கு தெரியுமா அந்த பதில்?

இனிக்க இனிக்க பேசியவள் நீ
இனி எப்போது காண்பேன் உன்னை?
என்னில் குற்றம் கண்டுபிடித்தாய்
தாய் சேயை திருத்துவது போல
அடுத்த முறை பார்க்கும் போது
அது, சேட்டு கடன்காரன் குற்றம் போல் ஆகிடுமா?
தெரியவில்லை எனக்கும்!

கண் மூடி யோசிக்கிறேன்
காற்றில் மிதந்து வரும் பாடல்
"எங்கிருந்தாலும் வாழ்க"
சிரித்து கொண்டே செல்கிறேன்
மனதில் சோகம் இழையோட!

1 comment: